கோவில்பதாகை ஏரி
ஆவடி அடுத்த கோவில் பதாகை ஏரி 570 ஏக்கர் பரப்பளவு உடையது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் கோவில் பதாகை ஏரி அதன் கொள்ளளவை எட்டியது.

அதனால், உபரி நீர் கலங்கள் வழியாக வெளியேற்றப்பட்டு, கிருஷ்ணா கால்வாயில் விடப்பட்டது. மேலும், 54 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆவடி, பருத்திப்பட்டு ஏரியும் அதன் முழு கொள்ளளவை எட்டியதால், கலங்கல் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டது.

மழை பாதிப்பால் ஆவடி மாநகராட்சியில் நேற்று முன்தினம் இரவு முதல், அதிகாரிகள் உட்பட 800 க்கும் மேற்பட்ட அனைத்து துறை ஊழியர்கள், இடைவிடாமல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பெரும்பாலான பகுதிகளில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலே செல்ல ↑
All Rights Reserved

source